பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

போலி கல்விச்சான்றிதழ் வழக்கு: மத்திய அமைச்சருக்கு எதிரான மனு தள்ளுபடி!

தேர்தல் ஆணையத்திடம் போலி கல்விச்சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:46 am

DIN

புதுதில்லி: தேர்தல் ஆணையத்திடம் போலி கல்விச்சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிர்தி இராணி.இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொழுது, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், கல்வித்தகுதி குறித்து தவறான தகவல்களை அளித்ததாக, அஹ்மேர் கான் என்ற பத்திரிக்கையாளர் அவர் மீது வழக்கு தொடந்தார்.

இராணி வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்துள்ளதாக கூறி, அவர் மீது இந்திய  தணடனை சட்டம் மற்றும்  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-ன் படியும் தணடனை வழங்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தில்லி நீதிமன்றம் , வழக்கு விசாரணைக்கு இராணியை அழைப்பதில்லை என்று முடிவு செய்ததுடன், அவர் மத்திய அமைச்சராக இருப்பதால் அவரை தொல்லை செய்யும் பொருட்டு வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.