மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மகள் திருமணத்திற்கு கர்நாடக முன்னாள் அமைச்சரின் 'அடடே' அழைப்பிதழ்!

கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன ரெட்டி தனது மகள் திருமணத்திற்கு அசத்தலான வீடியோ பத்திரிகை ஒன்றை தயார் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்,

News image
Updated On :19 அக்டோபர் 2016, 12:11 pm

DIN

பெங்களுரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன ரெட்டி தனது மகள் திருமணத்திற்கு அசத்தலான வீடியோ பத்திரிகை ஒன்றை தயார் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்,

கர்நாடகாவில் முந்தைய எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின்போது சுரங்கத்துறை  அமைச்சராக இருந்தவர் கலி ஜனார்த்தன ரெட்டி (வயது 49). இவரது மகள் பிரம்ஹானி. இவருக்கு வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

தனியார் சுரங்க அதிபரான கலி ஜனார்த்தன ரெட்டி தனது மகளின் திருமணத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை  செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக திருமண பத்திரிகையானது இதுவரை யாரும் செய்யாத முயற்சியாக புதுமையான விதத்தில் வடிவமைக்கப்பட்டது.

ஒரு சின்ன பெட்டி வடிவத்தில் திருமண பத்திரிகை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் திறந்தால் உள்ளே ஒரு சிறிய எல்.சி.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையை திறந்த உடன் அந்த திரையில் ஒரு வீடியோ படம் ஓடுகிறது. அதில் ஜனார்த்தன் ரெட்டியின் குடும்பத்தினர் தோன்றுகின்றனர். அவர்கள் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.அந்த வீடியோவின் இடையே மணமகள்-மணமகனும் தோன்றுகிறார்கள்.

மிக அதிக பொருட்செலவில் இந்த வீடியோ தயாராகி இருக்கிறது. இந்த வீடியோ பத்திரிகை தற்பொழுது ஊடகங்களில் பரவலான கவனம் பெற்றுள்ளது. இந்த கலி ஜனார்த்தன ரெட்டி சுரங்க மோசடியில் சிக்கி 3 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.