வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அவர் உலகின் மிக மெதுவான கேஷியர் இல்லை - ஒரு வைரல் வீடியோவின் உண்மை முகம்!

'உலகின் மிக மெதுவான கேஷியர்' என்ற பெயருடன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றின் பின் உள்ள நெஞ்சை உருக்கும் நிஜம் வெளிவந்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2016, 10:31 am

DIN

சென்னை:

'உலகின் மிக மெதுவான கேஷியர்' என்ற பெயருடன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றின் பின் உள்ள நெஞ்சை உருக்கும் நிஜம் வெளிவந்துள்ளது.

சமூக வலைதளங்களில் அண்மையில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. அந்த வீடியோவில்  வங்கி பெண் ஊழியர் ஒருவர் மிகவும் மெதுவாக வேலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய இணைய தளத்தில் கருத்து தெரிவித்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன் மிக கடுமையான வசைச் சொற்களைக்கொண்டு அப்பெண்ணை விமர்சித்திருந்தார். ஜெயமோகனின் இந்த கருத்துக்கு சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து  அந்த கருத்தை தம்முடைய இணையப் பக்கத்தில் இருந்து ஜெயமோகன் நீக்கி விட்டார். மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதனிடையே அந்த வீடியோவில் இடம் பெற்ற  வங்கி ஊழியரின் உண்மை நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவத்சவா தம்முடைய முகநூல்  பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ளதாவது:

வீடியோவில் மெதுவாக வேலை செய்யும் ஊழியர் பெயர் பிரேம்லதா ஷிண்டே. புனேவில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் காசாளராக பணியாற்றுகிறார். கணவரை இழந்த அவர் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார். அவரது மகன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். பிரேம்லதா ஷிண்டேவுக்கு 2 முறை ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. ஒருமுறை பக்கவாதத்தாலும்  பாதிக்கப்பட்டவர். வீடியோவில் இடம்பெற்று காட்சியானது சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய நாட்களில் எடுக்கப்பட்டது. இத்தனைக்கும் பிரேம்லதா ஷிண்டேவுக்கு பணிக்கு வராமலேயே முழு சம்பளத்தையும் பெரும் அளவுக்கு மருத்துவ விடுப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது வீட்டில் இருந்து கொண்டே அவர் ஊதியத்தைப் பெற முடியும். ஆனால் பிரேம்லதா ஷிண்டேவோ ஆனால் அதை விடுத்து ஓய்வு பெறும்போது கண்ணியத்துடனும் நேர்மையுடனும் ஓய்வு பெற நினைத்ததால் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வேலைக்கு திரும்பியிருக்கிறார்.

தம்முடைய சிகிச்சைக்கான பணத்தை தாமே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட லட்சக்கணக்கான பெண்களில் ஒருவராகத்தான் பிரேம்லதா ஷிண்டே இருக்கிறார். அவரை விமர்சித்து, கேலி செய்யும் பதிவு போட்டதற்கு பதிலாக அவரது உண்மை நிலையை சொல்லி பாராட்டும் வீடியோவை நாம் போட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு குந்தன் ஸ்ரீவத்சவாவின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.