புதுதில்லி: நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
தில்லியில் உள்ள விஞ்யான் பவனில் திங்களன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கேஜ்ரிவால் பேசும் பொழுது, 'தங்களுடைய தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக நீதிபதிகள் சிலர் கவலையில் உள்ளனர் என்பதை நான் அறிவேன். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகிறது எனும் செய்தி உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்க வேண்டிய ஒரு செயலாகும்.
இந்த செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமன்றி நீதித்துறையின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயலுமாகும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு வழங்கியுள்ள பரிந்துரைகளை 9 மாதங்களாக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இத்தகைய மோதல் போக்கை கடைபிடிப்பது உகந்தது அல்ல. நீதிபதிகள் நியமனத்தில் காலம் தாழ்த்துவது அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்யும்' என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், 'ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக கெஜ்ரிவால் முன்வைக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகிறது' என்று கூறினார்.
பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அர்விந்த் கேஜ்ரிவால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

600 நாள்களை நிறைவு செய்த சின்ன மருமகள்!

கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி திருவிழா!
வங்கியில் பணம் எடுக்க எலும்புக் கூடுடன் சென்ற பழங்குடி நபரால் பரபரப்பு

கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


