கயா: பிகார் மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 238 மி.மீ மழை பெய்துள்ளது. கயாவில், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் நீர் வடியாததால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீரில் மூழ்கியுள்ளது.
பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்குக் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் கவியரங்கம், விருதுகள் வழங்கும் விழா

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


