புது தில்லி: எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் அது குறித்த தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
எஃஐஆர் பதிவு செய்யப்படுவது குறித்த வழக்கில் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதாவது, காவல்நிலையங்களில் எந்த ஒரு சம்பவம் குறித்தும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால், அதில் இருந்து 48 மணி நேரத்தில் வழக்கு விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். மிக முக்கிய வழக்கு விவரங்களை பதிவு செய்ய 72 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும்.
வழக்கோடு தொடர்புடைய காவல்நிலைய இணையதளத்தில் எஃப்ஐஆர் பதிவுகள் உடனுக்குடன் பதிவிட வேண்டும்.
பயங்கரவாதம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பலாத்கார வழக்குகளுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்

விஷம் குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


