
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை வீட்டுக் கொடுக்க கூடாது என்று கூறி கன்னட நடிகை ஒருவர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையை கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கர்நாடகா நீரைத் திறந்து விட்டது. இதனைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் கன்னட நடிகர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை போராட்டக்காரர்கள் உருவாக்கியுள்ளனர். அதன் காரணமாக பிரபல இளம் கன்னட நடிகையான ராகினி திவிவேதி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கன்னடத்தில் 'காவிரி நமக்கு சொந்தமானது; அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது.நமக்கே நீர் இல்லாத பொழுது பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரணங்கள் எவ்வாறு இருந்தாலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலான அவரது இந்த செயல் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
முன்னதாக இந்த போராட்டடத்தின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் கேபிள் டிவியில் ஓளிபரப்பாகி வரும் 52 தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களும் அங்கு இப்போது ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.