பிரதமர் மோடி- ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சந்திப்பு!
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை பிரதமர் மோடி இன்று காலை சந்தித்துப் பேசினார்.


அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை பிரதமர் மோடி இன்று காலை சந்தித்துப் பேசினார்.
ஆப்கானிஸ்தான் அதிபரக பதவியேற பிறகு இரண்டாவது முறை பயணமாக அதிபர் அஷ்ரப் கனி இன்று காலை இந்தியா வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிஅவரை வரவேற்றார். இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்பபடத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், 'ஆப்கானிஸ்தானுடன் அதிகமாகும் நட்புறவு; இரண்டாவது தடவையாக இந்தியா வந்துள்ள அஷ்ரப் கனியை வரவேற்ற பிரதமர்' என்று தகவல் பகிர்ந்துள்ளார்.
இந்த பயணத்தின் பொழுது இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...