பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

உரி தாக்குதல்: மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்!

ஜம்மு காஷ்மீரின் 'உரி' ராணுவ முகாம் தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட, உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:18 pm

ஜம்மு காஷ்மீரின் 'உரி' ராணுவ முகாம் தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட, உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஜெய்ஷ் இ  முகமது தீவிரவாத குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை பலபப்டுத்துவது குறித்தும், எல்லையோரப் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட, உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் ஜெட்லீ, பாதுகாப்பு துறை அமைச்சர் மனோஹர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி ஜெனரல் தல்பிர் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   

கூட்டத்தில் எல்லையோர மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கலில் நிலவும் சூழ்நிலை  குறித்தும், உரி தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.