பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

டில்லியில் பட்டப்பகலில் இளம்பெண்ணுக்கு 22 முறை கத்திக்குத்து!

ஒரு தலைக்காதலில் ஏற்பட்ட தகராறில் டில்லியில் இளம்பெண்ணொருவர் இன்று காலை அவரது காதலனால் 22 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:18 pm

ஒரு தலைக்காதலில் ஏற்பட்ட தகராறில் டில்லியில் இளம்பெண்ணொருவர் இன்று காலை அவரது காதலனால் 22 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

வடக்கு டெல்லியின் புராரி பகுதியை சேர்ந்தவர் கருணா(21). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் இன்று காலை 9 மணி அளவில், தனது வீடு அமைந்துள்ள புராரி பகுதியில், சுரேந்தர் சிங் (34) என்பவனால் கத்தியால் கொடூரமாக 22 முறை குத்திக்  கொலை செய்யப்பட்டார்.

இதனால் உறைந்து  போன பொதுமக்கள் யாரும் கருணாவின் உதவிக்கு வரவில்லை.  பின்னர் சுதாரித்த பொது மக்கள் கருணாவை அருகில் உள்ள ஐ.எஸ்.பி.டி  மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு கொண்டு வரப்படும் போதே மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அது போல சூழ்ந்து இருந்த மக்கள்  தாக்கியதால் காயம அடைந்த சுரேந்தர் அருகே உள்ள அருணா ஆசப்  அலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டில்லி வடக்கு காவல்துறை இணை ஆணையர் மதுர்  வெர்மா பத்திரிக்கையாளர்களிடம்  தெரிவித்ததாவது:

சுரேந்தர் சிங் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கருணாவை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் கலவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரு குடும்பங்களும் சமாதானமாகிச் சென்றதால் நடவடிக்கை கைவிடப்பட்டது.

தற்போது கருணாவைக்  காதலிப்பதாக தெரிவித்த சுரேந்தர், வேறொரு வாலிபருக்கு கருணா தன்னுடைய புகைப்பபடங்களை அனுப்பியதாக தெரிய வந்தவுடன், கோபத்துடன் கருணாவை சந்திக்க வந்த பொழுது இந்த கொடூரம் நடந்துள்ளது.

இவ்வாறு வர்மா தெரிவித்துள்ளார்.

சுரேந்தர் ஏற்கனவே திருமணமாகி தற்பொழுது விவாகரத்து வழக்கு  நடந்து வருகிறது என்பதும், கருணா அவர் நடத்தி வந்த கணிப்பொறி பயிற்சி வகுப்பில் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.