புகழ்பெற்ற இணைய வணிக விற்பனை தளமான பிளிப்கார்ட் இந்தியாவில் பத்து கோடி வாடிக்கையாளர்களை எட்டி சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் அறிக்கையொன்றை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை புதன்கிழமை அன்று பத்து கோடி என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய இணைய வணிக சந்தையில், இந்த எண்ணிக்கையை எட்டிப் பிடித்த முதல் நிறுவனம் என்ற பெருமையை பிளிப்கார்ட் சாதித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழு கோடி என்ற எண்ணிக்கையை எட்டி சாதனை படைத்த ஆறு மாதங்களுக்குள் தற்போது இந்த புதிய இலக்கு எட்டப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது இந்தியாவில் கம்பிவழி மற்றும் கம்பி வழியற்ற இணைய சேவை பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கையில் 63 சதவீதமாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை குறித்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் கூறும் பொழுது,'மக்கள் எல்லோரும் எளிதில் வாங்கக் கூடிய, எல்லோருக்கும் எளிதில் பொருள்கள் கிடைக்கக் கூடிய, ஒரு பரந்து பட்ட தளத்தை உருவாக்கும் பணியில், இது சிறிய அளவிலான ஒரு முதல்படி என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

சித்திரை மாத பிரதோஷம்: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


