ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாட்சப்பின் புதிய  தனியுரிமைக் கொள்கை: கட்டுப்பாடுகளுடன் தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி!

பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்த, கடுமையான கட்டுப்பாடுகளுடன்  தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2016, 12:33 pm

பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்த, கடுமையான கட்டுப்பாடுகளுடன்  தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்சப்  கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அன்று தனது தனியுரிமைக் கொள்கைகளில் மாற்றம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளிட்டது.  அதன்படி தனது பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் , தனது உரிமையாள  நிறுவனமான முகநூலுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தில்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்க்ரா இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

புதிய கொள்கை நடைமுறைக்கு வந்திருக்கும் செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு முன்பு வரை சேகரிக்கப்பட்ட பயனாளர்களின் தகவல்கள் அத்தனையும், முகநூல் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ளப்படக் கூடாது.  

அதே போல் புதிய கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, வாட்சப் சேவையை விட்டு விலகும் பயனாளர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் அழிக்கபட வேண்டும்.

வாட்சப் சேவையை விட்டு விலகியவர்களின் தகவல்கள் உடனே அழிக்கப்பட்டு விடும் என்ற அந்நிறுவனத்தின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு, அது தவறான தகவல் என்று வாதி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, வாட்சப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்து, அதனை விட்டு விலகாமல் பயன்படுத்தி வருபவர்கள் தொடர்பான விபரங்களும் கூட உடனே அழிக்கப்பட்டு விட வேண்டும்

இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.