மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து 6வது நாளாக கன மழை பெய்து வருகிறது. மேலும் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை மக்கள் இன்று அதிகாலை, கன மழையின் சத்தம் கேட்டுத்தான் விழித்திருப்பார்கள். அந்த அளவுக்கு கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழை தொடர்ந்து இன்று 6வது நாளாக கொட்டித் தீர்த்து வருகிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் பேரிடர் மேலாண்மை குழுவினர், மழை காரணமாக யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையின் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ராஜீவ் கூறியுள்ளார்.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு எரிச்சல் குணமாக...
வீட்டிலிருந்தபடியே வருமானம்...
குழந்தைகள் வடிவமைப்பு
கோலிவுட் ஸ்டூடியோ
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

