மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் பிரணாப் முகர்ஜி

ஹரித்துவாரில் உள்ள கேதர்நாத் கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

News image
Updated On :28 செப்டம்பர் 2016, 12:19 pm

டேராடூன்: ஹரித்துவாரில் உள்ள கேதர்நாத் கோயிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக உத்தரகாண்ட் சென்ற பிரணாப் முகர்ஜி, டேராடூனில் புதுப்பிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஓய்வு இல்லத்தைத் திறந்து வைத்தார். நேற்று இரவு அங்குத் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் குடியரசு தலைவர் மாளிகையில் 12 குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார்.

தனது பயணத்தின் 2-வது நாளான இன்று ஹரித்துவாரில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவருடன் ஆளுநர் கே.கே.பால். முதல்-மந்திரி ஹரீஷ் ராவத் உள்ளிட்டோர் சுமார் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், 2013-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரிடருக்குப் பின் கேதார்நாத்தில் நடைபெற்றுவரும் மறுகட்டமைப்பு பணிகளையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டார்.

நாளை ஹரித்துவாரில் கங்கா ஆரத்தி வழிபாடு நடைபெற உள்ளது. இதில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்புகிறார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரணாப் முகர்ஜி கேதார்நாத் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.