பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ஆயுதங்களுடன் நான்கு மர்ம நபர்கள் புகுந்ததாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில், நேற்று ஆயுதம் தாங்கிய நான்கு மர்ம நபர்கள் நடமாடியதாக, உள்ளூர் கிராமவாசிகள் பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அவர்களை தேடி தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியது.
இது பற்றி பதான்கோட் மாவட்ட காவல்துறை தலைவர் ராகேஷ் கவுஷல் கூறியதாவது:
நங்கள் சக்கி நதி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை நடத்தினோம். இதுவரை எதுவும் முன்னேற்றம் இல்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. செவ்வாயன்று தொடங்கிய தேடுதல் வேட்டை இரவு முழுவதும் தொடர்ந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த வருட துவக்கத்தில் ஜனவரி 2-ஆம் தேதி பதான்கோட் ராணுவ விமான தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மார்ச் 1-ம் தேதி 234 தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம்!

டாடா பஞ்ச் இவி பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம்!

ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா செல்கிறார் பாக். பிரதமர்!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு!
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

