அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

காவிரி விவகாரத்தால் வன்முறை: நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

News image
Updated On :14 செப்டம்பர் 2016, 12:27 pm IST


புது தில்லி: தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, செப்டம்பர் 7ம் தேதி முதல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. ஏராளமான பேருந்துகள், லாரிகள் வான்முறையாளர்களின் வெறியாட்டத்தால் தீக்கிரையாகின.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு நிலை மோசடைந்தது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நாளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.