பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.யில் காவல் துறையை தாக்கும் காவித் துண்டுகள்!

காவித் துண்டு அணிபவர்கள் போலீஸாரைத் தாக்குவதற்கு உரிமம் பெற்றிருக்கிறார்களா என்று உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

News image
Updated On :25 ஏப்ரல் 2017, 8:53 pm

DIN

காவித் துண்டு அணிபவர்கள் போலீஸாரைத் தாக்குவதற்கு உரிமம் பெற்றிருக்கிறார்களா என்று உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னௌவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காவித் துண்டு அணிபவர்கள் போலீஸாரைத் தாக்குவதற்கு உரிமம் பெற்றிருப்பதுபோல் தெரிகிறது. கன்னௌஜ் காவல் நிலையத்திலும், ஆக்ராவில் அண்மையில் நடைபெற்ற மோதலிலும் போலீஸாருக்கு எதிராக காவித் துண்டு அணிந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
காவலர்களைத் தாக்குவதற்கு அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. சட்டம், ஒழுங்கு விவகாரம் சரியில்லை என்று எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குற்றம்சாட்டப்பட்டது. தற்போது, அலாகாபாத் நகரில் இளம் தம்பதியும், அவர்களது 2 மகள்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.