பாஜகவில் இணைந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: ராகுல் அதிர்ச்சி
மணிப்பூரில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனர்.


இம்பால்: மணிப்பூரில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர், அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
மணிப்பூரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த என். பிரேன் சிங் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், அந்த மாநிலத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களான நிகம்தங் ஹாகிப், ஒய். சுர்சந்திர சிங், எஸ். பீரா சிங், ஓ. லூகோய் சிங் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், அஸ்ஸாம் நிதியமைச்சர் ஹேமந்த விஸ்வகுமார், மணிப்பூர் பாஜக தலைவர் பாபானந்த சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்எல்ஏக்கள் கட்சி தாவல் ராகுலுக்கு கடும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...