அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குஜராத் மாநிலங்களவை தேர்தல்: தேசியவாத காங்கிரஸின் ஆதரவில் குழப்பம்

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (ஆக.8) நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ்

News image
Updated On :7 ஆகஸ்ட் 2017, 11:58 pm

DIN

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (ஆக.8) நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸில் இருந்து விலகிய சங்கர்சிங் வகேலா எம்எல்ஏ ஆகியோர் யாரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 3 எம்.பி.க்களின் பதவிகாலம் நிறைவடைவதையொட்டி, அந்த இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜகவில் அண்மையில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகிய 3 பேரும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் அகமது படேல் போட்டியிடுகிறார்.
இதில், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட 3 பேரில், அமித் ஷா, ஸ்மிருதி இரானியின் வெற்றி உறுதியாகும். 3-ஆவது நபரான ராஜ்புத், காங்கிரஸின் அகமது படேல் ஆகியோரிடையேதான் போட்டி நிலவுகிறது. இருவரில் யாருக்கு 45 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதோ, அவரே வெற்றி பெற முடியும். இதனால், 45 உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட பாஜக, காங்கிரஸ் ஆகியவை தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
இதில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸுக்கு, குஜராத் சட்டப் பேரவையில் காந்தல் ஜடேஜா, ஜெயந்த் படேல் ஆகிய 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் ஜடேஜா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசுகையில், "கட்சி மேலிடம் எங்களை, பாஜக வேட்பாளர் ராஜ்புத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது; எனவே ராஜ்புத்துக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம்' என்றார்.
அதேநேரத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலே கூறுகையில், "தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேரும், காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலுக்குதான் வாக்களிப்பர்' என்றார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வகேலா விலகியபோது செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து வாக்களிப்பேன்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் திங்கள்கிழமை கூறுகையில், "தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான தகவலை வெளியிட முடியாது' என்று மறுத்து விட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை தனது நண்பர் என்று மட்டும் வகேலா குறிப்பிட்டார்.
ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சோட்டுபாய் வசவாவின் ஆதரவு தனக்கு இருப்பதாக அகமது படேல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சோட்டுபாய் வசவா திங்கள்கிழமை கூறுகையில், "என்னுடைய தொகுதிக்கு யார் நல்லது செய்கிறார்களோ, அவருக்குதான் வாக்களிப்பேன்' என்றார். தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சங்கர்சிங் வகேலா, ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ ஆகியோர் மாறுபட்ட தகவலை வெளியிட்டு வருவதால், அவர்கள் யாரை ஆதரித்து வாக்களிக்க போகின்றனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. குழப்பமே நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.