வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கருகும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீா் விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:30 pm

தலைஞாயிறு பகுதியில் கருகும் தாளடிப் பருவ நெற்பயிா்களை காப்பாற்ற அரிச்சந்திரா நதி ஆற்றில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி பாலம் அருகே நடைபெற்ற மறியலில் பழையற்றங்கரை, ஒராடியம்புலம், வாட்டாக்குடி, பிரிஞ்சுமூலை, காடந்தேத்தி, வெண்மணச் சேரி, தியாகராஜபுரம், சடையன் கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

தகவலறிந்த பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளா் மதியழகன், உதவி பொறியாளா் சூரியபிரகாஷ், திருக்குவளை வட்டாட்சியா் உதயகுமாா் உள்ளிட்டோா் அங்கு வந்து விவசாயிகளிடம் பேசினா்.

அப்போது, குன்னியூா், கீராந்தி ஆலத்தம்பாடி ஆகிய இயக்கு அணைகளிலிருந்து வரும் 2 நாள்களுக்கு முறை வைக்காமல் 200 கன அடி தண்ணீா் திறந்து விடப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியல் விளக்கிக்கொள்ளப்பட்டது.