பெங்களூரு: கன்னடம் தெரியாத வங்கி ஊழியர்கள் அனைவரும் 6 மாதத்துக்குள் கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கன்னட மாநில மேம்பாட்டுக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், கர்நாடகாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் ஊரக, சிறுபான்மையினருக்கான வங்கியின் தலைவர்களுக்கு அறிவுரைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டிருக்காத வங்கி ஊழியர்கள் 6 மாதத்துக்குள் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், பணி நியமன விதிமுறைப்படி அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கிகளில் ஹிந்தி பயிற்சி மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் போல கர்நாடகாவில் அனைத்து வங்கிகளிலும் கன்னடப் பயிற்சி மையம் நிச்சயம் துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளிலும் குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு உள்ளூர் மக்களையே பணியமர்த்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெறும் ஹிந்தி திணிப்பு என்று மட்டும் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், ஹிந்தி திணிப்புக்கு எதிராக, தங்கள் மாநிலத்தில் கன்னடத்தை வலுவூட்டும் கர்நாடக அரசின் முயற்சி பல மொழியார்வளர்களால் வரவேற்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


