2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :10 ஆகஸ்ட் 2017, 7:08 am

DIN

நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் மாறுபட்ட கேள்வி தாளை சிபிஎஸ்இ வழங்கியது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் மாறுபட்ட கேள்வி தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல எனக் கூறிய நீதிபதிகள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறு ஏற்படாமல் இருக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சிபிஎஸ்இ-க்கு உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது எனவும் அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

2017-18 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வை கடந்த மே 7-ஆம் தேதி சிபிஎஸ்இ நடத்தியது. ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி தமிழ், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்பட பல்வேறு மாநில மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இத்தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்த வினாக்களுக்கும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இடம் பெற்ற வினாக்களுக்கும் மிகுந்த வேறுபாடு இருந்ததாகவும் மாநில மொழி வினாக்கள் மிகவும் கடுமையாக இருந்ததாகவும் கூறி ஒரு பிரிவு மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகளை வெளியிட அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.