டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டம்: முலாயம்

பாகிஸ்தான் உதவியுடன் இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டு வருவதாக சமாஜவாதி கட்சி நிறுவனரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2017, 8:43 pm

DIN

பாகிஸ்தான் உதவியுடன் இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டு வருவதாக சமாஜவாதி கட்சி நிறுவனரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், இடாவாவில் சமாஜவாதி கட்சி சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முலாயம் சிங் பேசியதாவது: இந்தியாவுக்கு முன்பு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய அச்சுறுத்தல், சீனாவிடமிருந்து வந்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளை அந்நாடு தொடர்ந்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், நமது ராணுவ வீரர்களின் நடவடிக்கையால் சீனாவின் முயற்சி பலிக்கவில்லை.
இந்த நிலையில், நமது எதிரி நாடான பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. சீனா - பாகிஸ்தானின் இந்தக் கூட்டணி, இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த விஷயம் மிகவும் தீவிரமானதாகும். எனவே, இதனை கவனத்துடன் கையாள வேண்டும் என்றார் முலாயம் சிங் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.