புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெங்களூருவில் தமிழில் எழுதப்பட்ட பேனர்கள் கிழிப்பு: கன்னட அமைப்பினர் வெறியாட்டம்

ஆடிக் கிருத்திகைக்காக தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால் பெங்களூருவில் பதற்றம் நிலவி

News image
Updated On :16 ஆகஸ்ட் 2017, 5:20 am

DIN

பெங்களூரு: ஆடிக் கிருத்திகைக்காக தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால் பெங்களூருவில் பதற்றம் நிலவி வருகிறது.

பெங்களூருவில் சுதந்திர விழா மற்றும் ஆடிக் கிருத்திகைக்காக தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்து பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்து வருகின்றனர்.

வேற்று மொழி ஆக்கிரமிப்பை பொறுக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறிய நிலையில், கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் பெங்களூரு புலிகேசி நகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை மட்டும் வெட்டி எறிந்து வருகின்றனர். இதையடுத்து பெங்களூருவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.