பாட்னா: பிகாரில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தனி விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடியை அறிவித்தார்.
பிகார் வெள்ள பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டம் சென்றடைந்தார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் பிகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் ஆகியோருடன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
அப்போது, வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் பிரதமர் மோடி நேரடியாகக் கேட்டறிந்தார். பிகார் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மோடி உறுதி அளித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மோடி, பிகாருக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடி ஒதுக்குவதாகவும், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்தியக் குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


