பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடங்கள் சிறை, 15 லட்சம் அபராதம்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடங்கள் சிறை, 15 லட்சம் அபராதம் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2017, 2:31 pm

DIN

தேரா சச்சா சௌதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். 

இவர் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டது. 

இந்நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் தண்டனை விவரங்கள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பின் தண்டனை விவரங்களை அறிவிப்பது தொடர்பாக அந்த சிறைச்சாலையிலேயே நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஜெகதீப் சிங், ஹெலிகாப்டர் மூலமாக சுனாரியா சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

நீதிமன்றத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சிறைச்சாலை உள்ள பகுதியைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது. எனவே 376 & 506 குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் இரு வழக்குகளிலும் தலா 10 வருடங்கள் என 20 வருடங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த குற்ற வழக்குகளுக்கு அபராதமாக ரூ.15 லட்சம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ரூ.14 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.