மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் தேர்தல் ரீதியிலான எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2017, 8:50 pm

DIN

காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் தேர்தல் ரீதியிலான எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
பிகார் மாநிலம், பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஏற்பாட்டின்பேரில் அண்மையில் நடைபெற்ற பேரணியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர், ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி தலைவர் சரத்யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 
தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. தங்களுக்குப் பதிலாக கட்சித் தலைவர்களை அனுப்பி வைத்தனர். அதேபோல், முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அந்தப் பேரணியில் தனது அரசியல் எதிரியான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதை சுட்டிக்காட்டி பேரணியைப் புறக்கணித்து விட்டது. எனினும், அந்தப் பேரணியில் தேசிய அளவில் மகா கூட்டணியை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதேநேரத்தில், ஐக்கிய ஜனதா தள கட்சி அதிருப்தித் தலைவர் சரத் யாதவ் சார்பில் கடந்த 17ஆம் தேதி நடத்தப்பட்ட பன்முக கலாசாரத்தை காப்பது தொடர்பான கூட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் பேரணியை புறக்கணித்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:
லாலு பிரசாத் யாதவ் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காதது குறித்தும், சரத் யாதவின் பன்முக கலாசாரத்தை காப்பது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பன்முக கலாசாரத்தை காக்கும் இயக்கத்துக்கும், தேர்தல் ரீதியில் அமைக்கப்படும் கூட்டணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பன்முக கலாசாரத்தை காப்பது என்பது மிகப்பெரிய விவகாரமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், காங்கிரஸ் கட்சியுடன் எந்த வகையிலும் தேர்தல் ரீதியில் கூட்டணியோ அல்லது புரிந்துணர்வோ ஏற்படுத்திக் கொள்ளாது. இந்த நிலைப்பாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
ஆனால், அதே நேரத்தில் பன்முக கலாசார இயக்கத்தை, மகா கூட்டணியுடன் ஒப்பிட்டு குழப்பக்கூடாது. மகா கூட்டணி பேரணியை லாலு பிரசாத் ஏற்பாடு செய்தார். இதுபோல் பல பேரணிகள் நடந்துள்ளன. அதில் எங்கள் கட்சி பங்கேற்காமல் இருந்துள்ளது. பன்முகக் கலாசாரத்தை பாதுகாப்பது தொடர்பான கூட்டங்களில் எங்கள் கட்சி கலந்து கொண்டுள்ளது என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.