பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிச., 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


புதுதில்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வங்கி பணப்பரிவர்தனைகள் மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கலின் பொருட்டு பான் எண் பெற்றுள்ளவர்கள், அதனை தங்கள் ஆதார் என்னுடன் இணைக்க வேண்டுமென மத்திய நிதித்துறையின் சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
முதலில் அதற்கான இறுதித் தேதி இன்றுடன் (ஆகஸ்ட் 31) முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் கணிசமான பேர் இன்னும் இதனை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இந்த தேதி நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.
அதற்கான ஆலோசனைகள் நிதித்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...