டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்ட பேனரில் வடகொரிய அதிபரின் புகைப்படம்!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பேனரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் புகைப்படம் இடம்பெற்ற விவகாரம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2017, 10:44 am

DIN

திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பேனரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் புகைப்படம் இடம்பெற்ற விவகாரம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுகண்டம் என்னும் நகரில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக நகரின் பல இடங்களில் உலக கம்யூனிஸ்ட் தலைவர்களின் புகைப்படம் அடங்கிய  பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் பம்பதும்பரா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு  காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட இது தொடர்பாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.