ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வேலையில்லாத் திண்டாட்டம்: இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கும் ஓர் இடமுண்டு!

ஆசிய நாடுகளில், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய இடம் கிடைத்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:35 am

DIN


புது தில்லி: ஆசிய நாடுகளில், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய இடம் கிடைத்துள்ளது.

என்ன.. சீனா, ரஷ்யாவைப் போல அல்லாமல், இந்தியா ஒரு நல்ல இடத்தில் இருக்கிறது என்று வேண்டுமானால் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

அதாவது, 37 ஆசிய நாடுகளில், வேலையில்லாமல் இருக்கும் பொதுமக்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. அதாவது, 2017ல், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 3.6% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது அண்டை நாடுகளான பூடானில் வேலையில்லாத் திண்டாட்டம் 2.4% ஆகவும், நேபாளில் 3.2% ஆகவும் உள்ளது. பாகிஸ்தானில் 5.9 சதவீதமாக உள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பில் உள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியர்கள் அதிகமாக வேலை தேடிச் செல்லும் சௌதி அரேபிய நாடுகளில்தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது.

அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் வேலையில்லாத் திண்டாட்டம் 3.8%ஆகவும், சௌதி அரேபியாவில் 5.5% ஆகவும் உள்ளது.

இலங்கை 4.6 சதவீதத்துடன் 17வது இடத்தில் உள்ளது.  பாகிஸ்தான் 5.9 சதவீதத்துடனும், ரஷ்யா 5.3 சதவீதத்துடனும் உள்ளன. ஓமன் தான் 16.9 சதவீதத்துடன் அதிகப் புள்ளிகளுடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. யேமன் 16 சதவீதத்துடன் அடுத்த இடத்திலும், ஜோர்டான் 14.9 சதவீதத்துடன் அதற்கடுத்த இடத்தையும் பிடித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.