வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மெஹபூபா சகோதரர் உள்பட இருவர் காஷ்மீர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் தம்பி தஸ்ஸாதுக் ஹுசைன் முஃப்தி உள்பட இருவர் காஷ்மீர் அமைச்சர்களாக வியாழக்கிழமை பதவியேற்றனர்.

News image
ஜம்முவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்குப் பிறகு நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்ற (இடமிருந்து) மாநில ஆளுநர் என்.என்.வோரா, புதிய அமைச்சர் ஜாவேத் முஸ்தஃபா, மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி,
Updated On :28 டிசம்பர் 2017, 7:44 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் தம்பி தஸ்ஸாதுக் ஹுசைன் முஃப்தி உள்பட இருவர் காஷ்மீர் அமைச்சர்களாக வியாழக்கிழமை பதவியேற்றனர்.
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரான தஸ்ஸாதுக், அண்மையில் காஷ்மீர் மாநில சட்ட மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கும், சந்தோரா தொகுதி எம்எல்ஏ ஜாவேத் முஸ்தஃபா மீருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் என்.என்.வோரா அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மெஹபூபாவின் தந்தையுமான முஃப்தி முகமது சயீதின் முதலாமாண்டு நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போது, காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியில் தஸ்ஸதுக் இணைந்தார். கட்சியில் இணைந்த ஓராண்டுக்குள் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் மாநில ஹஜ் புனித யாத்திரைத் துறை அமைச்சரான சயீத் ஃபரூக் அந்த்ராபி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இவர் முதல்வர் மெஹபூபாவின் மாமா ஆவார்.
ஜம்மு-காஷ்மீரில் இப்போது மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.
காங்கிரஸ் விமர்சனம்: ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மீர் இது தொடர்பாக கூறியதாவது:
காஷ்மீரில் முதல்வர் மெஹபூபாவின் உறவினர்கள்தான் அமைச்சரவையையும், முக்கியப் பொறுப்புகளையும் ஆக்கிரமித்துள்ளனர். காங்கிரஸில் குடும்ப அரசியல் இருப்பதாகக் குற்றம்சாட்டும் பாஜக, காஷ்மீரில் தங்கள் கூட்டணி அரசில் குடும்ப ஆதிக்கம் இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்?
காங்கிரஸின் பல்வேறு செயல்பாடுகளை விமர்சிக்கும் பாஜக, மெஹபூபாவின் தம்பி தஸ்ஸாதுக், தேர்தலில் மக்களைச் சந்திக்காமல் புறவாசல் வழியாக (மாநில சட்ட மேலவை உறுப்பினரானதன் மூலம்) அமைச்சராகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.