கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து  : ஜேட்லி அறிவிப்பு!

இனிமேல் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில்வே டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2017, 6:44 am

DIN

புதுதில்லி: இனிமேல் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில்வே டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அவர் தெரிவித்ததாவது:

ரயில்வே துறை:

* ரயில்வேயில் பாதுகாப்பு, சீர்திருத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை

* ரயில்வே துறை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ. 55 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

* இந்த ஆண்டில் 3500 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பு

* வரும் ஆண்டில் 9 மாநிலங்களுடன் சேர்ந்து 70 புதிய ரயில் திட்டங்கள் நிறைவேற்றம்

* 2019-க்குள் ரயில்பெட்டிகளில் பசுமைக் கழிவறை உருவாக்கப்படும்

* 2020 ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் ஆளில்லாத ரயில்வே க்ராஸிங் இல்லாத நிலை உருவாக்கப்படும்.

* நகரமயமாக்கலுக்கு வெகுவாக உதவும் மெட்ரோ ரயில் சேவைக்கு என புதிய கொள்கை உருவாக்கப்படும்.   அதன்மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

* நாடு முழுவதும் 500 ரயில்வே நிலையங்கள் ஊனமுற்றவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படும்.

* இனிமேல் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில்வே டிக்கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.