மத்திய பட்ஜெட்: 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
தற்போது அறிவிக்கப்பட்டு வரும் 2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது...


புதுதில்லி: தற்போது அறிவிக்கப்பட்டு வரும் 2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அவர் தெரிவித்ததாவது:
2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இது கடந்த ஆண்டில் ரூ.38,500 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 25% அதிகமாகும்.
அதேபோல் 100 நாள் வேலைத் திட்டத்தில் மகளிரின் பங்களிப்பு 55% ஆக உயந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...