கோவாவில் 11 மணி நிலவரப்படி 34% வாக்குப்பதிவு

கோவாவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், 11 மணி நிலவரப்படி 34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
vote
vote
Updated on
1 min read


பனாஜி: கோவாவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், 11 மணி நிலவரப்படி 34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கோவாவில் 35 சதவீத வாக்குகளும், தெற்கு கோவாவில் 32 சதவீத வாக்குகளும் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்தார்.

இதில், ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதம் சமமாக அதாவது 17% ஆக இருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, இன்று காலை கோவா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கர் பனாஜியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த 251 பேர் போட்டியிடுகிறார்கள். மாநிலம் முழுவதும் சுமார் 1,642 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 11.08 லட்சம் வாக்காளர்கள் உள்ளன.  மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும்.

கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 82.2 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com