புதுதில்லி: பஞ்சாப் மற்றும் கோவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஓட்டுப்பதிவில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் தேர்தல் ஆணையமானது முதுகெலும்பு இல்லாமல் மோடியிடம் சரணடைந்து விட்டது என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் 117 சட்டசபை தொகுதிகளுக்கும், கோவாவிலிருக்கும் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த ஓட்டுப்பதிவில் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு மாறாக கட்சி சின்னங்கள் மற்றும் இதர பிரச்சார பொருட்களுடன் வாக்குச்சாவடிக்கு வருதல், வாக்குப்பதிவு நாளன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தல் ஆகியவற்றில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுவதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கு எதிர்வினையாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
ஆர்.பி.ஐ மற்றும் சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை போன்று தேர்தல் ஆணையமும் மோடியிடம் முழுமையாக சரணடைந்து விட்டது. இந்த தேர்தலை ஆணையமானது வெட்கமற்ற , முதுகெலும்பற்ற அமைப்பாக இருக்கின்றது.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


