ஜம்மு எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பெண் பிஎஸ்எஃப் படையினரால் சுட்டுக் கொலை

சர்வதேச எல்லையில், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பெண்ணை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று இரவு சுட்டுக் கொன்றனர்.
Updated on
1 min read


ஜம்மு: சர்வதேச எல்லையில், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பெண்ணை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று இரவு சுட்டுக் கொன்றனர்.

அக்னூர் அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்புப் படையினரின் 33வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் பக்வாரி எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்திய எல்லைக்குள் ஒருவர் ஊடுருவுவதைப் பார்த்தனர்.

ஊடுருவலை நிறுத்தி திரும்பிச் செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் பல முறை எச்சரித்தும், அதையும் மீறி அந்த நபர் எல்லைக்குள் ஊடுருவியதால், வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஊடுருவல் நடந்த பகுதி இருட்டாக இருந்ததால், நபர் ஆணா பெண்ணா என்பதை அறிய முடியவில்லை என்றும், உடலை கைப்பற்றிய போதுதான், அது பெண் என்று தெரிய வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com