பெங்களூரு: புத்தாண்டு தினத்தன்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கம்மனஹள்ளி பகுதியில் புத்தாண்டு தினத்தன்று கொண்டாடட்டங்கள் முடிந்து வீடு திரும்பிய இளம்பெண் ஒருவரை மது போதையில் வாலிபர்கள் இருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் நேற்று ஏழு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பனசாவடி வட்ட காவல்துறை ஆய்வாளர் முனிகிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
புதன்கிழமை அன்று நடந்த விசாரணைக்கு பிறகு நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களனைவரும் 20 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை மேல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு, அடையாள அணிவகுப்பு நடைபெறும். அதன்பிறகு வழக்கு தொடர்பான விபரங்கள் உங்ககளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சூர்யா, சிரஞ்சீவி!

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு


