உத்தர பிரதேசம்: சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பலி!
உத்தர பிரதேசத்தின் இதா மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பலியாகினர்.


லக்னோ: உத்தர பிரதேசத்தின் இதா மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தின் இதா மாவட்டத்தில் ஜே .எஸ். பொதுப்பள்ளி அமைந்துள்ளது. இன்று காலை அந்தப் பள்ளியின் 60 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் ஒன்று பட்டியலி சாலையில் சென்று கொண்டிருந்தது,.அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த ட்ரக் ஒன்று மோதியதில் 24 மாணவர்கள் மரணம் அடைந்தனர்.
காலை நேரத்தில் நிலவும் மூடுபனியின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பனிமூட்டம் காரணமாக அந்த பிரதேசத்த்தில் உள்ள பள்ளிகளுக்கு எல்லாம் வரும் 20-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பள்ளி மட்டும் செயல்பட்டு வந்துள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...