புதுதில்லி: ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் முதலமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும், கடன் அட்டை மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வரிவிதிப்பு ரத்து, டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளுக்கு வரிச்சலுகை மற்றும் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 மானியம் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிப்பு என்ற விஷயம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம் மாநில முதலைமைச்சர்களின் குழு அளித்த பரிந்துரை அறிக்கையானது கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்!

சிக்ஸ்பேக் உடன் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷ் மகன்?

உ.பி.யில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது அமில வீச்சு: மகள் பலி, தாய் கவலைக்கிடம்

ஆர்சிபி பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜோஷ் ஹேசில்வுட்!
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


