குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் செல்கிறார்.

News image
Updated On :3 ஜூலை 2017, 11:29 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் செல்கிறார்.
இஸ்ரேலில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பயங்கரவாதம், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் போன்ற பொதுவான சவால்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக மோடி கூறினார்.
இந்தியப் பிரதமர் ஒருவர், இஸ்ரேல் செல்வது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேலில் அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ரூவன் ரிவ்லினையும் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர், இரு நாட்டு தொழில் துறையினர் மத்தியிலும், இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் அவர் உரையாற்றவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள யாத் வஷீம் நினைவிடத்துக்குச் சென்று மோடி அஞ்சலி செலுத்தவுள்ளார். மேலும், கடந்த 1918- ஆம் ஆண்டு, ஹைபா நகரின் விடுதலைக்காகப் போரிட்டு உயிர்நீத்த இந்திய ராணுவத்தினரின் நினைவிடத்துக்கும் மோடி செல்கிறார்.
இதுதொடர்பாக, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் சிறப்பு வாய்ந்த கூட்டாளியான இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறேன். இஸ்ரேல் பிரதமருடன், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் பலனடையும் வகையில், இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளேன்.
இந்திய மற்றும் இஸ்ரேல் தொழில் துறையினரின் கூட்டத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேலும் விரிவுபடுத்துவது, இரு நாடுகளும் கூட்டாக முதலீடு செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இஸ்ரேலின் தொழில்நுட்ப வளர்ச்சியை நேரடியாகப் பார்ப்பதற்கும், இந்தப் பயணம் உதவிகரமாக அமையும் என்று மோடி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி, வரும் 6- ஆம் தேதி ஜெர்மனி செல்கிறார். இரண்டு நாள் பயணமாக அங்கு செல்லும் அவர், ஹம்பர்க் நகரில், வரும் 7, 8- ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.