குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் பலனில்லை:காங்கிரஸ் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவுக்கு துளியும் பலனில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2017, 7:34 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவுக்கு துளியும் பலனில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி அந்த நாட்டில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன் கூறியதாவது:
தற்போது இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 3 ஆண்டுகளில் 64 முறை வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் கண்டு ரசிக்க முடிந்ததைத் தவிர, இந்தப் பயணங்களால் இந்தியர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. தற்போது 65- ஆவது முறையாக அவர் இஸ்ரேல் சென்று என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைய நிலவரப்படி, அவரது முந்தைய வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவுக்கு ஒரு துளியும் பலன் ஏற்படவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.