நரேந்திர மோடி மிகவும் பலவீனமான பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் பலவீனமான பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் பலவீனமான பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் அண்மையில் சுற்றுப்பயணம் செய்தபோது, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை மிகவும் பாதிக்கச் செய்யும் ஹெச்1பி விசா விவகாரம் குறித்து அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சந்திப்புக்கு பிறகு, அதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேபோல், அமெரிக்கா தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜம்மு- காஷ்மீர் பகுதியை இந்தியப் பகுதி என்று குறிப்பிடாமல், இந்தியா நிர்வகிக்கும் பகுதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கும் இந்திய அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. இதை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரை சமூகவலை தள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணமானது, வெறும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகவே இருந்தது. முக்கிய விவகாரங்கள் எதுவும் விவாதிக்கப்படவில்லை.
நரேந்திர மோடி, மிகவும் பலவீனமான பிரதமர் ஆவார். இந்திய நலன்களுக்கு, மோடியின் சுற்றுப்பயணத்தில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்று அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
ஜம்மு-காஷ்மீர் குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு குறித்தும், ஹெச்1பி விசா விவகாரம் குறித்து டிரம்பிடம் மோடி பேசவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியான பக்கத்தின் இணையதள முகவரியையும் சுட்டுரை கணக்கில் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வதை காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்தது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன் கூறுகையில், '3 ஆண்டுகால ஆட்சியில் 64 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மோடி மேற்கொண்டுள்ளார்; இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இஸ்ரேல் பயணத்தால், நாட்டுக்கு நன்மை பயக்குமா? என்பது குறித்து காலம்தான் பதில் சொல்ல வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...