ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

மல்லையாவுக்கு எதிரான வழக்கு: வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை வரும் 14-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2017, 7:23 pm

DIN

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை வரும் 14-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடமிருந்து பெற்ற சுமார் ரூ.9000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான மோசடி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக லண்டனில் மல்லையா தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக தமது உள்நாட்டு, வெளிநாட்டு சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டது. எனினும், மல்லையா இந்த விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை அவமதித்ததாக மல்லையா மீது உச்ச நீதிமன்றம் கடந்த மே 9-ஆம் தேதி குற்றம்சாட்டியது. மேலும், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான தண்டனை விவரங்கள் குறித்து ஜூலை 10-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும், அப்போது நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராகியிருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இந்த வழக்கானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. ஆனால், இந்த விசாரணையில் மல்லையா ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை வரும் 14-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும், இந்த வழக்குக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரசு தலைமை வழக்குரைஞரிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.