நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சசிகலா விவகாரம்: கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா 'திடீர்' பணியிட மாற்றம்!

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக பரபரப்பு அறிக்கை அளித்த கர்நாடக சிறைத்துறை டி ஐ ஜி ரூபா 'திடீர்' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.      

News image
Updated On :17 ஜூலை 2017, 3:18 pm IST

பெங்களூரு; சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக பரபரப்பு அறிக்கை அளித்த கர்நாடக சிறைத்துறை டி ஐ ஜி ரூபா 'திடீர்' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.      

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலர் சசிகலா தற்பொழுது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சமீபத்தில் பரபப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா மௌட்கில், ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில், குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து உள்ளூர் சேனல்களில் செய்தி கசிந்தது.

அதாவது இதற்காக கர்நாடக மாநில சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அப்பொழுது சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர். 'சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது தொடர்பாக நான் அளித்துள்ள அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்' என்று கூறியிருந்தார்.    

இதற்கு உடனடி எதிர்வினையாக, இந்த அறிக்கை விவகாரத்தில் ஊடகங்களில் பேட்டியளித்தற்காக விளக்கம் கோரி கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக சிறையில் சசிகலாவுக்கு விருந்தினர்களை சந்திக்க என்று தனியாக குளிர்சாதன அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறை கேமராவில் பதிவாகியிருக்க கூடிய இது தொடர்பான சிசிடிவி பதிவுகள் உடனுக்குடன் அழிக்கப்படுவதாக ரூபா இரண்டாவது அறிக்கையினையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் 

தற்பொழுது கர்நாடக சிறைத்துறை டி ஐ ஜியான ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக  'திடீர்' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சைகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.