ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

நேரு குடும்பத்தால் தான் காஷ்மீரில் பிரச்னை: பாஜக சாடல்

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னனைகளுக்கு நேருவும் அவரது குடும்பமும் தான் முக்கிய காரணம் என பாஜக தலைவர் சுதான்ஷூ திரிவேதி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார். 

News image
Updated On :22 ஜூலை 2017, 9:56 am

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாத பிரச்னைகளுக்கு ஜவஹர்லால் நேரு குடும்பமும், ஃபரூக் அப்துல்லா குடும்பமும் தான் முக்கிய காரணம் என பாஜக தலைவவர்களில் ஒருவரான சுதான்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஃபரூக் அப்துல்லாவின் கருத்து மிகவும் மோசமாகவும், கண்டிக்கத்தக்க வகையிலும் உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவதற்கு நேரு மற்றும் அவரது குடும்பமும், ஃபரூக் அப்துல்லா குடும்பமும் தான் முக்கிய காரணம் என்றார்.

அவரது கருத்தை சக பாஜக தலைவர்களில் ஒருவரான திலீப் கோஷ் வழிமொழிந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது:

ஃபரூக் அப்துல்லா அரசியலுக்கு தேவையற்றவர். அவரது கருத்துக்கள் எல்லாம் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவானதாகவே இருக்கும். எனவே அவரது கருத்துகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. 

அவரது கருத்துக்களை போலவே ஃபரூக் அப்துல்லாவையும் நம்பக் கூடாது. அது இந்திய இறையாண்மைக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் உதவியை இந்தியா நாட வேண்டும் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.