அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

போதைப் பொருள் விவகாரம்: நடிகர் நவ்தீப்பிடம் எஸ்ஐடி இன்று விசாரணை

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நவ்தீப்பிடம் தெலங்கானா கலால்துறை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) திங்கள்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2017, 10:55 pm

DIN

போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நவ்தீப்பிடம் தெலங்கானா கலால்துறை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) திங்கள்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகும்படி, தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள் ஏராளமானோருக்கு எஸ்ஐடி அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதில் நவ்தீப்புக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதையேற்று, ஹைதராபாதில் உள்ள தெலங்கானா கலால் மற்றும் கட்டுப்பாட்டு துறை எஸ்ஐடி முன்பு நவ்தீப் திங்கள்கிழமை ஆஜராகவுள்ளார். அவரிடம், போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எஸ்ஐடி அதிகாரிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
தமிழில் "அறிந்தும் அறியாமலும்", "ஏகன்" உள்ளிட்ட படங்களில் நவ்தீப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் திரைப்படத் தயாரிப்பாளர் புரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, பிரபல நடிகர் தருண், குணச்சித்திர நடிகர் பி. சுப்பா ராஜு உள்ளிட்டோரிடமும் எஸ்ஐடி குழுவினர் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.