தில்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு; மக்கள் பீதி
தலைநகர் தில்லியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.25 மணியிளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.


புதுதில்லி: தலைநகர் தில்லியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.25 மணியிளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஹரியானாவின் ரோட்டக் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.25 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆகப் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசம், தலைநகர் தில்லி உள்ளிட்ட இடங்களில் மிதமான நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
இதில், பல கட்டிடங்களில் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்து சாலைகளை நோக்கி ஒடிவந்தனர்.
இதற்கிடையில், ரிக்ட்டர் அளவுகோலில் 5 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய வானியல் துறை கூறியுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் சமூக ஊடகங்களின் தகவல்களையும் பகிர்ந்தனர்.
நில அதிர்வியல் துறையை சேர்ந்த விஞ்ஞானி வேட் பிரகாஷ் தாகூர், நில நடுக்கம் 4.25 மணியளவில் உணர்ந்ததாகவும், "பூகம்பத்தின் அளவு 5 மடங்காக உள்ளது என்றும் இது மிதமானதுதான் என செய்தி நிறுவனங்களுக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை உணரப்பட்ட நில நடுக்கத்தால் எந்தவித சேதங்கள் அல்லது சேதங்களின் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...