6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி: மொபைல் சேவை  நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் ட்ராய்! 

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) ...

News image
Updated On :6 ஜூன் 2017, 12:45 pm

DIN

புதுதில்லி: மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாக 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்)  பரிந்துரைக்கும் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள்  இருப்பதை, மொபைல் சேவை  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதே இல்லை. எனவே குறைந்த செலவில் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பிய ட்ராய், தற்பொழுது மொபைல் சேவை  நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக ட்ராய் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் இண்டர்நெட் திட்டங்களில்,  ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள ஒரு இன்டர்நெட் சேவை திட்டமானது கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அத்துடன் அந்த திட்டமானது அதிக அளவு டேட்டா பயன்பாடு கொண்டாதாகவும் இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் தொலை தொடர்பு சேவையை விரிவு படுத்தும் பொருட்டும், டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும், ட்ராய் அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்தினை, அனைத்து மொபைல் சேவை  நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு  வழங்குவார்கள்;என்று எதிர்பார்க்கிறோம்.

ட்ராய் அமைப்பானது இது தொடர்பாக விரைவில் மொபைல் சேவை  நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை கூட்டங்கள் நடத்த உள்ளது. அலைபேசி நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலமே வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தினை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.