குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் 10 உறுப்பினர் குழு நாளை ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக அக்கட்சியினர் புதன்கிழமை கூடி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக அக்கட்சியினர் புதன்கிழமை கூடி ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தவது குறித்து முடிவு செய்வதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, சமாஜவாதி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ் சந்திர மிஸ்ரா, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் டெரக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரஃபுல் படேல் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் தில்லியில் புதன்கிழமை முதல்முறையாக கூடி குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனர்.
இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என தகவல்கள் உலாவுகின்றன.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடனும், எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜக சார்பில் 3 பேர் கொண்ட குழுவை அக்கட்சின் தேசியத் தலைவர் அமித் ஷா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com