கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்?: மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2017, 7:54 pm

DIN

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மும்பை தடா நீதிமன்றம், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் உறுதிசெய்தது. எனினும், அவருடைய தண்டனை 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இதனிடையே, பிணையில் வெளியில் இருந்த சஞ்சய் தத், கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.புணேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். நன்னடத்தை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சஞ்சய் தத் சிறையில் இருந்த காலத்தில், முதலில் 90 நாள்களும், பிறகு 30 நாள்களும் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு தொடர்ச்சியாக பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து, புணேவைச் சேர்ந்த பிரதீப் பாலேகர் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.எம்.சாவந்த், சாதனா ஜாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
எந்த அடிப்படையில் சஞ்சய் தத்தின் நன்னடத்தை மதிப்பிடப்பட்டது? தண்டனைக் காலத்தில், பாதி நாள்களை அவர் வெளியே கழித்த நிலையில், அவருடைய நன்னடத்தையை மதிப்பிடுவதற்கு போதிய அவகாசம் கிடைத்தது எப்படி? சஞ்சய் தத்தின் கோரிக்கையை சிறைத்துறை டிஐஜி நேரடியாக ஆளுநருக்கு அனுப்பினாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பிறகு, சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலையானபோது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.